சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த இளம் பெண் தரமணியில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் பணியாற்றிய வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்த சதீஷ்சும் அவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணுடன், சதீஷ் பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு சதீஷ் சம்மதிக்காததால், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.