தமிழ்நாடு

Thiruvallur | Bajji | TN Police | `பஜ்ஜி' சாப்பிட்ட சிறுமி மரணம்.. பெற்றோர் தலையில் இறங்கிய இடி

`பஜ்ஜி' சாப்பிட்ட சிறுமி மரணம்.. பெற்றோர் தலையில் இறங்கிய இடி

thanthitv

Thiruvallur | Bajji | TN Police | `பஜ்ஜி' சாப்பிட்ட 9 வயது சிறுமி மரணம்.. பெற்றோர் தலையில் இறங்கிய இடி

பெரியபாளையம் அருகே பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த லட்சிவாக்கம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்ரீத்திகா என்கிற மகள் உள்ள நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி தண்டலம் பகுதியில் உள்ள பஜ்ஜி கடையில் சிறுமி ஸ்ரீத்திகா பஜ்ஜி சாப்பிட்ட போது திடீரென வாந்தி,மயக்கம் ஏற்படவே உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுமிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த இரண்டு நாட்களாக சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமிக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK | Death | தவெக நிர்வாகி கொ*ல சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி

Erode | Blast | வீட்டில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து.. இளைஞர் படுகாயம்

Aadhav Arjuna Speech | ``திமுக MP-யின் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட IUML MLA-க்கள்’’ -அமைச்சர் ஆதவ்

KN Nehru Raid| CM விஜய் பேசி முடித்ததும் திடீர் திருப்பமாக வெளியான FIR - 10%, வாட்ஸப் சாட்

CM Vijay | "மேயர் பிரியாவுக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?" - அடுக்கிய திமுக சரவணன்