தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபருடன் மது குடித்துவிட்டு கும்பல் செய்த செயல் - ஒற்றை போட்டோவால் சிக்கிய 6 பேர்

தந்தி டிவி

ஆலங்குளம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த ஆறு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் விஜயன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். வேலை முடிந்தவுடன் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு, அருகே உள்ள காட்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது 3 பேர் விஜயன் அருகில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர். மது போதையில் இருந்த விஜயனை அவர்கள் மேலும் குடிக்க வைத்துள்ளனர். பின்னர் நண்பர்கள் 3 பேரை வரவைத்து அவர்கள் விஜயன் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் ரூபாய் 60 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயன் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். மது அருந்தும்போது விஜயன் அருகில் அமர்ந்து மது குடித்த 2 பேருடன் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி மாறாந்தையை சேர்ந்த அழகு சுந்தரம், சூர்யா, பேச்சிமுத்து உள்பட 6 பேரை கைது செய்ததுடன் 4 லட்சம் மதிப்பிலான நகைகளையும் மீட்டனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்