தமிழ்நாடு

"குட்கா முறைகேடு நடந்தது உண்மை தான்" - முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

குட்கா முறைகேடு நடந்தது உண்மை தான் என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்ஜ், தனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், புகார் கூறப்பட்ட காலத்தில் தான் பதவியில் இல்லை என்றும், அதற்கு பிறகே தான் பணியில் சேர்ந்ததாகவும் விளக்கம் அளித்தார். ஆனால் தான் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட பிறகு குட்கா புகார் குறித்த தகவல்கள் வெளியானது என்றும் அவர் கூறினார். பல இடங்களில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்றார். மேலும் சிபிஐ நடத்திய சோதனையில் தனது வீடு தொடர்பான ஆவணங்களை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் ஜார்ஜ் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்