Gas Cylinder Shortage | கேஸ் தட்டுப்பாடு - சென்னையின் தற்போதைய நிலை இதுதான்.. #gascylindershortage #gascylinder #thanthitv சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல ஓட்டல்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றன. சில உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் கிடைக்காது என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், உணவு வழங்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில ஹோட்டல்கள் விறகு அடுப்பு மற்றும் இன்டக்ஷன் அடுப்பு மூலம் உணவு சமைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால் மேலும் ஹோட்டல் தொழில் பாதிக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.