தமிழ்நாடு

கேஸ் கசிந்ததா? விஷமா? - உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம் | போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

கேஸ் கசிந்ததா? விஷமா? - உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம்

போலீசார் தீவிர விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே, கேஸ் கசிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவரது வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, மணிகண்டனின் மனைவி சரஸ்வதி, இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் மயக்கத்தில் இருந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அனைவரும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கேஸ் கசிந்ததா? அல்லது விஷம் அருந்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்