கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் எண்ணெய் கிணற்றின் வால்வை சீரமைத்தனர். இச்சம்பவத்தால் எவ்வித பாதிப்பும் உண்டாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.