தமிழ்நாடு

Gas Cylinder | சிலிண்டர் கிடைக்குமா கிடைக்காதா? - அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்

thanthitv

ஈரான் மீதான போர் காரணமாக, இந்தியாவில் 57 சதவீத குடும்பங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து 'லோக்கல் சர்க்கிள்ஸ்' (Local Circles) அமைப்பு நடத்திய ஆய்வில், முன்பதிவு செய்த பிறகும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனை பயன்படுத்தி, சில இடங்களில் சிலிண்டர்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்ற 21 சதவீதத்தினர், வழக்கமான விலையை விட கூடுதல் பணம் கொடுத்து சிலிண்டர் வாங்கியதாக வேதனை தெரிவித்துள்ளனர். போதிய இருப்பு உள்ளதாக மத்திய அரசு ஒருபுறம் உறுதி அளித்தாலும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கலால் தட்டுப்பாடு நீடிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், முறைகேடுகளில் ஈடுபடும் ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்