சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடாக பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது... சென்னையில் தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க மாநில தலைவர் முரளி செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியளித்தார். தமிழ்நாட்டிலும் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும், மக்கள் அச்சத்தால் கடந்த 4 நாட்களில் வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கியதால் செயற்கையான தட்டுப்பாடு போல நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசலை கேன்களில் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல் நிலையங்களுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும், போர் அடுத்த 20 நாட்கள் நீடித்தாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடாக பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் டீலர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் முரளி தெரிவித்தார்.