தமிழ்நாடு

Gas Cylinder | மக்களே இறங்கியது இடி.. அபாயத்தில் வீட்டு சிலிண்டர்

Gas Cylinder | மக்களே இறங்கியது இடி.. அபாயத்தில் வீட்டு சிலிண்டர்

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்.பி.ஜி முனையத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.50 கோடி வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகையை வழங்க வலியுறுத்தி இன்று காலை முதல் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. போராட்டம் நீடித்தால் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு