நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் காவிரி பாசன வாய்க்காலில் கரை மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 150 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தென்னைக்கு கீற்று கொட்டகை அமைத்து வாய்க்கால் அருகே தங்கி உள்ளனர். காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் சமையல் கேஸில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்து கொட்டகை முழுவதும் பரவியுள்ளது. இதில் ஒரு போலிரோ வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்