தமிழ்நாடு

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் : வாகன ஓட்டிகள் தவிப்பு

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில் அருகே 2 அடிக்கு தேங்கி நிற்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் தெல்லிமேடு பகுதியில் உள்ள ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. காலை முதல் மீண்டும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடி அளவிற்கு மழைநீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தெல்லிமேடு ஏரிக்கரை உடைந்ததாலும், தென் மேலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஏரிகளும் நிரம்பி வழிவதால் சாலையை கடந்து ஓடும் நீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்