முன்னே சென்ற `வேவு’ கார்.. பின்னால் லாரிக்குள் ஒளித்து வைத்திருந்தது என்ன? - மப்டியில் சென்று தூக்கிய அதிகாரிகள் #ganja #lorry கஞ்சா கடத்தலை மாறுவேடத்தில் சென்று தூக்கிய போலீஸ் திருவள்ளூர் அருகே சினிமா பாணியில் முந்திரி கழிவுகளுக்குள் மறைத்து பல ஆண்டுகளாக கஞ்சா கடத்தி வந்த கும்பலை, மப்பேடு போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஒடிசாவிலிருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை, மாறுவேடத்தில் இருந்த போலீஸார் மடக்கி பிடித்தனர். எண்ணெய் தயாரிக்கும் முந்திரிக் கழிவு மூட்டைகளுக்கு அடியில் கஞ்சாவை மறைத்து வைத்து, யாருக்கும் சந்தேகம் வராதபடி இவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க, லாரிக்கு முன்னால் ஒரு காரைச் அனுப்பி வேவு பார்த்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்தச் சம்பவத்தில் வேலூரைச் சேர்ந்த அருண் பாண்டியன், லோகேஷ் உட்பட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் பின்னணியில் உள்ள ஒடிசா மாநில கஞ்சா வியாபாரிகளைப் பிடிக்க தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.