தமிழ்நாடு

Gangavalli | Arun | வாகன சோதனையில் சிக்கிய தவெக நிர்வாகி அருண் அதிரடி கைது

வாகன சோதனையில் சிக்கிய தவெக நிர்வாகி அருண் அதிரடி கைது

thanthitv

Gangavalli | Arun | வாகன சோதனையில் சிக்கிய தவெக நிர்வாகி அருண் அதிரடி கைது கெங்கவல்லி அருகே இரு தரப்பு மோதல்- த.வெ.க., நிர்வாகி கைது கெங்கவல்லி அருகே இரு தரப்பு மோதல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த த.வெ.க. நிர்வாகி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூரில் ஜல்லிக்கட்டு காளை ஓடிய போது அஜய் என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சேதமானது. இதனால் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜய் தரப்புக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழக தெடாவூர் நகர செயலாளர் அருண் உள்ளிட்டோர் பழனி முருகன் குடியிருப்பு பகுதிக்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், அருண் உட்பட 15 பேர் மீது கெங்கவல்லி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த தவெக நகரச் செயலாளர் அருண், வாகன சோதனையின்போது சிக்கினார்.

Chennai Metro பூந்தமல்லிக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரயில்கள் - சென்னையே இதுக்காக தான காத்திருந்துச்சி

Car Reels குபுகுபுவென நெருப்பை கக்கி சீறிய கார் - சென்னையை அலறவிட்ட `தீப்பொறி’ விக்னேஷ் கைது

Chennai Police | சென்னையில் மட்டும் 18000 போலீஸ் - முழுவீச்சில் இறங்கினர்

Gift ``லவ் அஜித்குமார்.. பிரியமுடன் விஜய்’’ என எழுதி அஜித்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த CM விஜய்

DMDK | Premalatha | DMK | MK Stalin | இடைத்தேர்தலில்... பிரேமலதா எடுத்த முடிவு