தமிழ்நாடு

இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

தந்தி டிவி

ஐதராபாத்தைச் சேர்ந்த மிக பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தான் இந்த சங்கா ரெட்டி...மற்றும் ஜனார்த்தன் ரெட்டி...

மியாபூரில் உள்ள விடுதியில் இருந்து தங்களுடன் பணியாற்றும் 26 வயது இளம்பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு யாதாத்ரியில் ஒரு சைட்டைக் காட்டுவதாகக் கூறி புறப்பட்டுள்ளனர் இருவரும்...

அவர் புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் என்பதால் வேலை கற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்...

ஐதராபாத் நோக்கி கார் சென்றுள்ளது... சரியாக இரவு 10.30மணி...கட்டியும் கட்டாமலும் பாதியில் நின்றிருந்த கட்டடத்தின் அருகே ஆள் அரவமற்ற பகுதியாக பார்த்து நின்றது அந்தக்கார்...

முதலில் அந்த சங்கா ரெட்டியும் ஜனார்த்தன் ரெட்டியும் அந்த இளம்பெண்ணுக்கு சாப்பிட உணவு கொடுத்துள்ளனர்...ஆனால் அவர் மறுத்து விடவே...குளிர்பானமும், இனிப்பும் வழங்கியுள்ளனர்...

சரி பசிக்கு சாப்பிடலாம் என நினைத்து இனிப்பை சாப்பிட்டு விட்டு கூல் டிரிங்சையும் குடித்துள்ளார் அந்த இளம்பெண்...

அப்போது அப்பெண்ணுக்கு லேசான தலை கிறுகிறுவென சுற்றத் துவங்கியுள்ளது... காலையில் இருந்து சாப்பிடாததால் வரும் மயக்கமாக இருக்குமோ என அவர் நினைத்து முடிப்பதற்குள்ளாகவே முழுமையாக மூர்ச்சையுற்றார் அந்த இளம்பெண்...

இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த காமுகர்கள்...அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து...அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்...கிட்டத்தட்ட 4 மணி நேரம் சங்கா ரெட்டியும் ஜனார்த்தன் ரெட்டியும் சித்ரவதை செய்துள்ளனர் அந்த இளம்பெண்ணை... அதிகாலை 3 மணி வரை அந்தக் கொடூர காமுகன்கள் அப்பெண்ணை விடவில்லை...

பிறகு மீண்டும் அந்த இளம்பெண்ணை ஏற்றிய விடுதியிலேயே இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர் இருவரும்...

பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சங்கா ரெட்டியும் ஜனார்த்தன் ரெட்டியும் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்...

வேலை சொல்லித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று சக ஊழியர்களே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்