தமிழ்நாடு

காருடன் 380 சவரன் தங்க நகை கடத்தல்...

கோவையில் தங்க நகைகளுடன் சென்ற காரை கடத்திய கொள்ளையர்கள், மதுக்கரை அருகே காரை விட்டுவிட்டு தப்பித்துள்ளனர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மற்றொரு கிளைக்கு, கார் மூலம் 380 சவரன் நகை மற்றும் 243 கிராம் வெள்ளிப் பொருட்களை, ஊழியர்கள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். காக்காசாவடி அருகே வந்து கொண்டிருந்த போது, நகைகள் இருந்த காரின் பின்பகுதியில், திடீரென இரண்டு கார்கள் வந்து மோதின. இதனால் கார் நின்றது. பின்னர் அந்த கார்களில் இருந்து கீழே வந்த 10 பேர் கொண்ட கும்பல், நகைகள் இருந்த காரின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் காருக்குள் இருந்த இரண்டு ஊழியர்களை தாக்கி நகைகளுடன் காரையும் அந்தக் கும்பல் கடத்திச் சென்றது. கொள்ளையர்களை எட்டு தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் கடத்திச் சென்ற கார் மதுக்கரையில் உள்ள தென்றல் நகரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகைகளை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் காரை மட்டும் அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியுள்ளனர். கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்