தமிழ்நாடு

நகைகளுடன் சேர்த்து காரையும் கடத்தி சென்ற கும்பல்... சினிமா பாணியில் நடந்த சம்பவம்

தந்தி டிவி

கோவை சேர்ந்த நகை வியாபாரிகளான விஜயகுமார் உட்பட மூன்று பேர் ஒரே காரில் பெங்களூரில் இருந்து நகைகளை வாங்கிவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது கார் தருமபுரி மாவட்டம் பூலாபட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, இவர்களை பின் தொடர்ந்து வந்து இரண்டு சொகுசு காரில் வந்த 12 க்கும் மேற்பட்டோர்கள் நகை வியாபாரிகளின் காரை வழிமறித்துள்னர். பின்னர் கார் கண்ணாடிகளை உடைத்த கும்பல், நகை வியாபாரிகளை தாக்கிவிட்டு 5 கிலோ தங்க நகை மற்றும் காரையும் கடத்தி சென்றுள்ளனர். நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் நகை வியாபாரிகளில் யாரேனுக்கும், இந்த கொள்ளை சம்பவத்திற்க்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்