'கஜா' புயலுக்கு நிவாரணம் கேட்டு, போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன், நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.