தமிழ்நாடு

ஜி-20 சுற்றுச்சூழல் கூட்டம்.. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

தொழில்துறை தலைமையிலான கூட்டணி, ஆதார வளப்பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும் என மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை தொடர்பான 4-ஆவது கூட்டம், சென்னை, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், ஆதாரவள பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கான தொழில்துறை தலைமையிலான கூட்டணியை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். இதில், ஐரோப்பிய யூனியன், கனடா, டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், நீடித்த சுற்றுச்சூழல் தன்மையில் நிலையான தாக்கத்தை உருவாக்க இந்தியாவின் ஜி-20 நாடுகளின் தலைமைத்துவத்துக்கு பிறகும் தொடரும் வகையில், இந்தக் கூட்டணி தற்சார்பு கொண்டதாக இருக்கும் என்று கூறினார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..