தமிழ்நாடு

மயானத்தில் பிணத்தை சவக்குழியில் இறக்கும் கடைசி நொடியில்.. பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியைச் சேர்ந்த கருப்பாயி என்று மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய நொச்சிமேடு பகுதியில் மயானத்திற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். மயானம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால், மூதாட்டியை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நொச்சிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மயானத்தில் மண் கொட்டி அந்த இடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்த பிறகு உறவினர்கள் மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்