மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆகிய பகுதிகளில் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் பால் மருந்து கடைகள் தவிர்த்து, அனைத்து கடைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பலசரக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க கூடிய கடைகள் காலை 6மணி முதல் மதியம் 2மணி வரை மட்டும் செயல்படும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டுமே நடந்து சென்று வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33சதவித ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.