தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பற்றிய முழு விவரம்..

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 767 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 8 ஆயிரத்து 291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையை அடுத்து சென்னையில் 105 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்

BREAKING || யாரும் செய்யாததை முதல் ஆளாக செய்து முடித்த விஜய் - ரெடியான லிஸ்ட்

Chennai | Auto Drivers | தலைவிரித்தாடும் LPG தட்டுபாடு - ஸ்தம்பித்து நிற்கும் டிரைவர்கள்

BREAKING || அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு - மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை