தமிழ்நாடு

கோரிக்கை நிறைவேறாத விரக்தி... தீக்குளித்த தொழிலாளி மரணம்.. உடல் ஊனமுற்ற மனைவி கதறல்

கோரிக்கை நிறைவேறாத விரக்தி... தீக்குளித்த தொழிலாளி மரணம்.. உடல் ஊனமுற்ற மனைவி கதறல்

தந்தி டிவி

கோரிக்கை நிறைவேறாத விரக்தி... தீக்குளித்த தொழிலாளி மரணம்.. உடல் ஊனமுற்ற மனைவி கதறல்

மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைக்காததை கண்டித்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற மாட்டு வண்டி தொழிலாளி, மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்திடுமாறு பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படாத‌தால் வேதனையடைந்த பாஸ்கர், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தீக்குளித்தார். இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த‌ அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளி பாஸ்கருக்கு உடல் ஊனமுற்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்