தமிழ்நாடு

Tasmac | Wine Shop | "நவம்பர் 1 முதல்.." வந்தது முக்கிய அறிவிப்பு

"நவம்பர் 1 முதல்.." வந்தது முக்கிய அறிவிப்பு

thanthitv

#Tasmac #WineShop #ThanthiTV

Tasmac | Wine Shop | "நவம்பர் 1 முதல்.." வந்தது முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் TASMAC மதுபான கடைகளில் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக நுகர்வோரிடம் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுக்கும்போது அந்தத் தொகை திரும்ப வழங்கப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1 முதல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரியாக 10 ரூபாய் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலையிலேயே சேர்க்கப்படுகிறது. இதனால், தனியாக 10 ரூபாய் வசூலிக்கும் நடைமுறை நிறுத்தப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காலி மதுபாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் நுகர்வோருக்கு 10 ரூபாய் திரும்ப வழங்கும் நடைமுறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தொகை வசூலிக்கும் பணியாளர்கள் மற்றும் உரிய கண்காணிப்பு செய்யாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து கடைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதுத்தொடர்பாக அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?