சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், மதுபோதையில் பிளேடால் அறுத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில், நண்பர்கள் இருவர் நீண்ட வரிசையில் நின்று மதுவாாங்கி வந்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையம் அருகே வைத்து குடித்த அவர்களிடையே,சண்டை ஏற்பட்டது. சாலையின் நடுவே மாறிமாறித் தாக்கிக்கொண்ட நிலையில், கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் இருவரும் தாக்கிக் கொண்டனர். தகவலின் பேரில் வந்த போலீசார், காயமடைந்த நபரை அருகிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.