தமிழ்நாடு

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?

தாம்பரம் அருகே சேலையூரில், ஃப்ரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் தனியார் டி.வி. செய்தியாளர், அவரின் மனைவி மற்றும் தாய் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி

சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தவர் பிரசன்னா. இவரின் மனைவி அர்ச்சனா. இவர்கள் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் உள்ள வீட்டில் கடந்த 6 மாதங்களாக முன் வசித்து வந்தனர். புதிதாக கட்டப்பட்ட இந்த வீடு, பூஜையறை, 2 படுக்கை அறை என 5 அறைகள் கொண்ட விசாலமான வீடு...

வழக்கம் போல நேற்று இரவு இவர்கள் தூங்கச் சென்ற நிலையில் இவர்கள் வீட்டின் பூஜையறையின் அருகே இருந்த ஸ்விட்ச் போர்டில் அதிகாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பூஜை அறையின் அருகே ஃப்ரிட்ஜை வைத்திருந்ததால் தீப்பொறியானது வேகமாக பரவி ப்ரிட்ஜின் வயர்கள் மீது பட்டது. மளமளவென பரவிய தீ, ப்ரிட்ஜின் அடிப்பாகத்தில் இருந்த மோட்டார்கள் பக்கம் சென்றது.

அப்போது அங்கே இருந்த ப்ரிட்ஜ்ஜில் வாயு நிரம்பிய சிலிண்டர் மீது தீப்பொறி பற்றியதில் அது சுமார் 8 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதையடுத்து ப்ரிட்ஜின் கேஸ் கசிந்து அறை முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என வீட்டில் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் அறை முழுவதும் புகை பரவியதால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

சத்தம் கேட்டு படுக்கையறைகளில் இருந்து வெளியே வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. கதவு, ஜன்ன​ல்கள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாலும், புகை சூழ்ந்த இடத்தாலும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் 3 பேரும் தவித்தனர்.

ப்ரிட்ஜில் இருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்த 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தனர். பயங்கர சப்தத்துடன் கேஸ் வெடித்ததில் வீட்டின் ​மேற்கூரை, டைல்ஸ் கற்கள் அனைத்தும் உடைந்து நொறுங்கின.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி