தமிழ்நாடு

ஆடி மாதத்தில் இலவச ஆன்மிக பயணம்- வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

ஆடி மாதத்தில், புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு செல்லும் வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு தொடங்கும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தில் ஆயிரம் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்றும் 4 கட்டங்களாக நடைபெறும் ஆன்மிக பயணம் ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது எனவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்