* அரக்கோணத்தை சேர்ந்த குமார் என்பவரின் தந்தைக்கு 1993ம் ஆண்டில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* அந்த நிலத்தின் ஒரு பகுதியில் தொழிற்கல்வி நிறுவனம் அமைத்துள்ளதாக கூறி நில ஒதுக்கீட்டை ரத்து செய்து மாவட்ட வருவாய் அதிகாரி 2005ம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குமார் தொடர்ந்த வழக்கை, நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் விசாரித்தார். அப்போது, நீண்ட காலத்துக்க முன் வழங்கிய நிலங்கள், இன்னும் ஏழை விவசாயிகளுக்கு பயன்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
* ஒதுக்கீடு பெற்றவர்களின் வாரிசுகள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருப்பது தெரியவந்தால் ஒதுக்கீட்டை ரத்து செய்து, மீட்க எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இலவசமாக ஒதுக்கிய நிலங்களை கண்டறிய அதிகாரிகளுக்கு 8 வாரங்களில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.