தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி : வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் 8 ஆம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணங்களை, ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. இந்நிலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக, கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக, வேலூர் மாவட்டத்தில், 6 ஆயிரத்து 292 பேரும், சென்னை மாவட்டத்தில், 5 ஆயிரத்து 206 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்