தமிழ்நாடு

அமைச்சர் பெயரை சொல்லி பல லட்சம் மோசடி.. சிக்கிய மகன் தந்தை.. சென்னையில் அடுத்த பரபரப்பு

தந்தி டிவி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் அவரது மகன் ஹரிஷ் ஆகியோர், வேலைவாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அமைச்சர் உதயநிதியின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அமைச்சரின் வாகனம் எனக் கூறி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தாமோதரன் என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருப்பதும் அவரது மகன் ஹரிஷ் கிறிஸ்தவ மத போதகராக இருப்பதும் தெரிய வந்துள்ளது. எத்தனை பேரை இதுபோன்று ஏமாற்றியுள்ளார்கள் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை