தமிழ்நாடு

Sivagangai | Crime | கோடிக்கணக்கில் மோசடி | எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்த மக்கள்

கோடிக்கணக்கில் மோசடி | எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்த மக்கள்

thanthitv

Sivagangai | Crime | கோடிக்கணக்கில் மோசடி | எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்த மக்கள்

FQL முதலீட்டு நிறுவனம் மீது கோடிக்கணக்கில் மோசடி புகார் சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு சிவகங்கை மாவட்டத்தில் FQL என்ற முதலீட்டு நிறுவனத்தின் பெயரில், அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஒவ்வொருவரிடமும் சுமார் ரூ.2 லட்சம் வரை முதலீடாக பெற்றதாகவும், தற்போது முதலீட்டு தொகையும், வருவாயும் திரும்ப வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரை மேலூர் மற்றும் திண்டுக்கல் நத்தம் பகுதிகளிலும் இதே நிறுவனத்தின் மீது ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளது. சிவகங்கையில் வசூலிக்கப்பட்ட மொத்த தொகை, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விசாரித்து, பணத்தை மீட்டுத் தருவதுடன், மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nepal Flood Rescue | நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்கள்.. நிம்மதி பெருமூச்சு விட வைத்த சேதி

Suitcase Deadbody கூடுவாஞ்சேரி மனித கறி பிரியாணி - ஜோடியாக பிடித்து.. தமிழ்நாடு இழுத்துவரும் போலீஸ்

Minister Nirmalkumar | ``பத்திரிகையில திமுககாரங்க பேர் எதுக்கு?’’ - Min.நிர்மல்குமார் ஆவேச குரல்

#BREAKING || NepalDisaster | இந்தியாவுக்கு நன்றி சொன்ன நேபாள அதிபர்

Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கேஸை வைத்து மிரட்டல் - Insp.க்கு இடியை இறக்கிய ஐகோர்ட்