தமிழ்நாடு

Namakkal | TN Police | எலும்பு முறிவு.. கால் அகற்றப்பட்ட சிறுமி பலி.. நாமக்கல் அருகே பரபரப்பு

எலும்பு முறிவு.. கால் அகற்றப்பட்ட சிறுமி பலி.. நாமக்கல் அருகே பரபரப்பு

thanthitv

Namakkal | TN Police | எலும்பு முறிவு.. கால் அகற்றப்பட்ட சிறுமி பலி.. போலீஸ் குவிப்பு.. நாமக்கல் அருகே பரபரப்பு

நாமக்கல், பரமத்தி வேலூரில் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழந்த‌தாக கூறி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரமத்திவேலூர் அருகே பொய்யேரி கிராமத்தை சேர்ந்த கவிஷ்கா என்ற 7 வயது சிறுமி, கடந்த 24ம் தேதி பள்ளியில் விளையாடியபோது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு மாவு கட்டு போட்டுள்ளனர். சிறுமிக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், சோதனை செய்த‌தில் கால் முழுவதுமாக சேதம் அடைந்த‌து தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் வலது கால் அகற்றப்பட்ட நிலையில், சிறுமி கவிக்ஷா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமி உயிரிழப்புக்கு தனியார் மருத்துவனையின் தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், சம்மந்தப்பட்ட மருத்துவரை கைது செய்து மருத்துவனைக்கு சீல் வைக்க வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பதற்றமான சூழல் நிலவுவதால் பரமத்தி வேலூர் டி.எஸ்.பி வெண்ணிலா தலைமையில் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

#BREAKING || Theft | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக உடைத்து கொள்ளை - களத்தில் இறங்கிய 5 தனிப்படை

Breaking | Accident | “இன்னும் கொஞ்ச நேரத்துல கேரளா போயிடுவோம்” சிரித்தபடியே கடைசி செல்ஃபி வீடியோ

#BREAKING || CM Vijay | CM விஜய் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

DVAC | KN Nehru | TN Politics | கே.என்.நேரு விவகாரம்.. DVAC எடுத்த முடிவு.. அதிரும் அரசியல்

Train | Diwali | Train Ticket | IRCTC | தீபாவளி ரயில் டிக்கெட்..! சில நிமிடங்களில் தீர்ந்தது..