தமிழ்நாடு

எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு

எம்ஜிஆரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டது தொடர்பான வழிமுறைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அப்பலோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த 1984-ம் ஆண்டில், முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்ததை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் பலர், முரண்பட்ட தகவல்களை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் , அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டது தொடர்பான வழிமுறைகள் குறித்தும் வரும் 23-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அப்பலோ நிர்வாகத்திற்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்