Mayiladuthurai | சீதளா மாரியம்மனை தேடி வந்த Foreigners - மனமுருகி நின்ற காட்சி #Mayiladuthurai #temple #thanthitv மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில், கஜகஸ்தான் மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர். ஆன்மீகச் சுற்றுலா வந்துள்ள 7 வெளிநாட்டுப் பக்தர்கள், கோவிலின் சிறப்புகளை ஆர்வத்துடன் கேட்டறிந்து மண்டியிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்ட இவர்கள், பஞ்சபூத ஸ்தலங்களுக்கும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டனர்.