தமிழ்நாடு

ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டு வேலை... ரூமுக்குள் அடைத்து.. சாப்பாடு கொடுக்காமல் மிரட்டிய கொடூரம் - மாடியிலிருந்து குதித்த பெண்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த மாரி, குடும்பச்சூழலால் வெளிநாடு செல்ல முடிவெடுத்து ஏஜெண்ட் ஒருவரை நம்பி கத்தாருக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 11-ல் கத்தாருக்கு சென்ற மாரியை தொடர்ந்து வீட்டு வேலைக்கு செல்ல வற்புறுத்தப்பட்ட நிலையில், கடுமையான வேலை பளு காரணமாக அவர் பணிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், 4 லட்ச ரூபாய் கொடுத்தால் இந்தியாவிற்கு அனுப்பவதாக கூறி மிரட்டிய ஏஜெண்டுகள், மாரியை அறையில் அடைத்து வைத்ததை அடுத்து, மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தபடி அவரளித்த தகவலின்பேரில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தூதரகத்தின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பின் மாரி இந்தியா அழைத்து வரப்பட்டார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்