தமிழ்நாடு

டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் : 1வது இடத்தில் கோலி, 5 வது இடத்தில் தோனி

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் 13 வது இடத்தையும் நடிகர் கமல் 56வது இடத்தையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளனர்.

தந்தி டிவி

பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரை தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், சல்மான்கான், அமிதாப்பச்சன் ஆகியோர் அடுத்த‌டுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். 5 வது இடத்தில் தோனி உள்ளார். தமிழக பிரபலங்களை பொறுத்தவரை 13 வது இடத்தை ரஜினி காந்தும், 16 வது இடத்தை ஏ.ஆர் ரகுமானும் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு 47 வது இடமும், நடிகர் அஜித்குமாருக்கு 52 வது இடமும் இயக்குநர் ஷங்கருக்கு 55 வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் கமல் 56 , நடிகர் தனுஷ் 64, இயக்குநர் சிவா 80, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 84 ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு