தமிழ்நாடு

மீன் சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ஆய்வில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படவில்லை என மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் தகவல்.

தந்தி டிவி

"ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படவில்லை"

ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டி அருகே உள்ள மீன் சந்தையில், மீன்வளத் துறை ஆய்வாளர் சசிகலா, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, பார்மலின் ரசாயனம் கொண்டு மீன்கள் பதப்படுத்தப்பட்டுள்ளதா, என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதே சமயம் பார்மலின் கொண்டு மீன்களை, பதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்