திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகள் மூலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி 41 சதவிகிதம் முடிவுற்றுதாகவும், மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என, கூறினார்.