நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் இருப்பதால், மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனரகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.