நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் கிணற்று நீர் | காரணத்தை சொல்லி கதறும் விவசாயிகள் பாலாற்றில் கழிவுநீர் கலப்பு - நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் அவலம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலாற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் போது, நுரை பொங்கி துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் குப்பைகள் தேக்கம் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.