TN Election | TN Border | 3 மாநில பார்டரில் இறங்கிய பறக்கும் படை | தப்பிக்கவே முடியாது.. #TNElection #election2026 #TNelection2026 #Gudalur #thanthitv காங்கிரஸ் கட்சித் தொப்பிகள் மற்றும் கொடிகள் பறிமுதல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக - கேரள எல்லைப் பகுதியான எலியாஸ் கடையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவிலிருந்து வந்த வாகனத்தை சோதனையிட்டதில், உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சின்னம் பதித்த 23 தொப்பிகள் மற்றும் கொடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூன்று மாநில எல்லைகள் சந்திக்கும் பகுதி என்பதால், கூடலூரில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.