வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 32 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தனியார் வங்கிக்கு சொந்தமான அந்த பணம் பேருந்து நிலையத்தில் செயல்படும் ஏ.டி.எம்.-ல் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையின் போது பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள், சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.