தமிழ்நாடு

தொடரும் கனமழை- மிதக்கும் கடலூர்

கனமழை காரணமாக கடலூர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தந்தி டிவி

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தங்கராஜ் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேபோல் துரைசாமி நகர், பாரதி நகர், வில்வ நகர், ராமலிங்க நகர், அழகப்ப நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?