சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்கள், 55 நாட்களுக்கு பின் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை தமிழகம் அழைத்து வரும் பணியில் மீன்வளத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மியான்மர் நாட்டில் பர்மா விசைப்படகு ஒன்று கடலில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அவர்களை மீட்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 2 மீனவர்களில், பாபு என்ற மீனவர் கடலில் மாயமானதாக சக மீனவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மீன்வளத்துறையின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீனவர்களை கண்டுபிடித்து 10 நாட்களாகியும் இன்னும் ஏன் தமிழகம் அழைத்துவரவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.