4pm Live Usilampatti 
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் தீயணைப்பு வீரர் தற்கொலை

உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் தீயணைப்பு வீரர் தற்கொலை

thanthitv

உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் தீயணைப்பு வீரர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத்துறை வீரர் சுரேஷ்குமார்.

சென்னை கிண்டி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த சுரேஷ்குமார், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், வீடு கட்டுவதற்காக சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், அவர்கள் கொடுத்த தொடர் தொந்தரவு மற்றும் மன உளைச்சலால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்

Mekedatu | DK Shivakumar | மேகதாது விவகாரம்.. ஒன்று கூடிய MPக்கள்.. DKS அதிரடி மூவ்..

Mekedatu Dam Issue | மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு இடியை இறக்கிய மத்திய அரசு

CJP | NEET | Cockroach | "மீண்டும் பெரும் போராட்டம்.." CJP கடும் எச்சரிக்கை.. தொற்றிய பதற்றம்