தமிழ்நாடு

என்.எல்.சி. சுரங்கத்தில் மளமளவென பற்றிய தீ...விண்ணை முட்டும் கரும்புகை...நெய்வேலியில் பரபரப்பு

தந்தி டிவி

நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ராட்சத இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில், நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம், மேலே கொண்டு வருவதற்காக, பயன்படுத்தப்படும், பல கோடி மதிப்பிலான, ராட்சத இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. சுரங்கம் முழுவதும் கரும்புகையுடன், வானுயர தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படாததால் கன்வேயர் பெல்ட், ரோலர் உராய்வு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிந்ததாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்