தமிழ்நாடு

Fire Accident | குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - அருகில் வீடுகளுக்கும் பரவிய தீயால் பரபரப்பு

Fire Accident | குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - அருகில் வீடுகளுக்கும் பரவிய தீயால் பரபரப்பு

thanthitv

Fire Accident | குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - அருகில் வீடுகளுக்கும் பரவிய தீயால் பெரும் பரபரப்பு

காரைக்காலில் பயங்கர தீ விபத்து - குடோன்கள், வீடுகளில் பரவிய தீ காரைக்கால் நெடுங்காடு சாலையில் உள்ள இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் அந்தக் காட்சிகளை பார்க்கலாம்... காரைக்கால் நெடுங்காடு சாலையில் உள்ள இரும்பு குடோன் மற்றும் மர இழைப்பகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயின் வீரியம் காரணமாக, அருகில் இருந்த இரண்டு வீடுகள் மற்றும் சுற்றியுள்ள வயல்வெளிகளுக்கும் தீ அதிவேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்பு வாகனங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், நாகப்பட்டினத்தில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பயங்கர தீ விபத்து மற்றும் கரும்புகை மூட்டம் காரணமாக, கும்பகோணம் - காரைக்கால் இடையே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது

CM Vijay | TN Budget | பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்..CM விஜய் ஆலோசனை

Icecream அண்ணாநகரில் மதுபான ஐஸ்கிரீம் கிடைக்கிறதா? - தூக்கிவாரிப்போடும் தகவல்.. அலசும் ஆபீஸர்ஸ்

Negombo Prison Riot| சிறைக்குள் ரத்தம் தெறிக்க தெறிக்க கலவரம்.. 25 பேர் கோர பலி.. 50+ பேர் படுகாயம்

ADMK | AMMK | ``டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில்’’ - கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்த குரல்

Senthil Balaji's Brother Ashok | Lookout Circular | ED-க்கு எதிராக செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு