தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
காக்கிவாடன்பட்டியில் உள்ள ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலக்கும் பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்ததில், அறையில் இருந்த விளாம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மம்சாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, துரைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்