தமிழ்நாடு

4 மாடிகள் கொண்ட பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல துணிக்கடையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல துணிக்கடையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பண்டிகை காலம் என்பதால், 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் துணிகளை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழ்த்தளம் முழுவதும் தீ பற்றி எரிந்த‌தால், ஊழியர்கள் வெளியேற முடியாமல், அலறினர். அதிர்ச்சியடைந்த தீயணைப்பு படையினர், கண்ணாடிகளை உடைத்து, கயிறு கட்டி ஊழியர்களை காப்பாற்றியுள்ளனர். செங்குன்றம், மாதாவரம், அம்பத்தூர் ,மணலி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்