தமிழ்நாடு

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சேதமாகின.

தந்தி டிவி
வள்ளிமில் பகுதியில் வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மூடி கிடந்துள்ளது. இந்நிலையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதற ஆரம்பித்தன. தகவல் அறிந்து அங்கு வந்த 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரின் துரித முயற்சியால் தீ அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்